ஏழைகளுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்.... 17/09/2019

ஏழைகளுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்.....
Sep 17, 2019


அமெரிக்காவில் செயல்படும் உணவகம் ஒன்று, பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கி பிரபலமடைந்து வருகிறது.

அமெரிக்காவின் பிரெவட்டன் நகரில் ‘Drexell & Honeybee’ என்ற உணவகம் கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான லிசா தாமஸ் மெக்மில்லன், தனது கணவர் மற்றும் மற்றொரு முதலாளியான பிரட்டீ மெக் மில்லன் ஆகியோருடன் இணைந்து மதிய வேளையில் ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக சுட சுடஉணவு வழங்கி வருகிறார்.

இவரது உணவகத்தில் ஆர்டர் செய்யும் எந்த உணவுக்கும் விலை இல்லை என்பதால், ஏழைகள், முதியவர்கள் மட்டுமல்லாது, பலரும் வந்து உணவு உண்டு செல்கின்றனர். இதற்கு ஈடாக சிலர் 360 ரூபாய் வரை அங்கிருக்கும் நன்கொடை பெட்டியில் இட்டு செல்வதோடு, சிலர் வீட்டில் விளைவிக்கப்படும் காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி செல்கின்றனர்.

எந்த வித லாபமுமின்றி இந்த உணவகத்தை நடத்தி வரும் மெக்மில்லன் தம்பதி இதுபற்றி கூறுகையில், ஏழைகளுக்கு உணவளிப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன், கல்லூரியில் இலவச உணவகம் நடத்தி வந்ததாக தெரிவித்த மெக்மில்லன், அதன் பின் முதியவர்களும் வந்து செல்வே, அவர்களும் பயன்பெறும் வகையில் இந்த உணவகத்தை தொடங்கி நடத்தி வருவதாக கூறினார்.

மருந்துகளுக்கு கூட போதிய பணம் இன்றி அவதிப்படும் முதியவர்களே தங்களது உணவகத்தை அதிகம் நாடுவதாக கூறும் அவர், இந்த உணவகம் பிரபலமானதற்கு பின் பலரும் மின்னஞ்சல் மூலம் தினந்தோறும் நன்கொடை வழங்கி வருகின்றனர் எனவும், சிலர் சுமார் 70,000 ரூபாய் வரை நன்கொடை வழங்கி செல்வதாகவும் தெரிவிக்கிறார்.

உணவகத்தின் மூன்று உரிமையாளர்களும் தங்களது ஓய்வூதியத்தை வைத்து, இந்த உணவகத்தை சேவை அடிப்படையில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019