பள்ளி மாணவிகளுக்கு இலவச செல்போன்..! 19/09/2019

பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி மாணவிகளுக்கு இலவச செல்போன்..
Sep 19, 2019


பஞ்சாப் மாநிலத்திலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 11-ம்வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் முதலமைச்சராக அம்ரீந்தர் சிங் உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் மொபைல் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பஞ்சாப் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தலைமையில் நடந்தது. இதில் நடப்பு நிதியாண்டில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன்படி வரும் டிசம்பரில் முதற்கட்டமாக, இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அரசு பள்ளிகளில் 11,12 ஆம் வகுப்புகளில் படிக்கும் ஸ்மார்ட் போன் இல்லாத,மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019