எல்.இ.டி. டி.வி விலை குறைய வாய்ப்பு உள்ளது 19/09/2019

டி.வி. விலை குறைய வாய்ப்பு..!
Sep 19, 2019


இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி.க்களுக்கு விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால், அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி. சாதனங்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் வரி விதித்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த வரி விதிப்பு அமலில் உள்ளது.

இந்த இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். எல்.இ.டி. டி.வி.யில் பொருத்தப்படும் பல நவீன கருவிகள் மீதும் மத்திய அரசு விதித்த வரியையும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி.க்கள் மீதான 5 சதவிகித வரி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 4 சதவிகிதம் அளவுக்கு விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி ஆகிய பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வர உள்ள நேரத்தில் எல்.இ.டி. டி.வி. விலை குறையும் பட்சத்தில் அதிக அளவு தொலைக்காட்சி பெட்டிகளை விற்பனை செய்ய முடியும் என்று வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019