ஊழியர்களுக்கு ஒரு லட்சம் போனஸ் 20/09/2019

ஊழியர்களுக்கு ஒரு லட்சம் போனஸ் அறிவிப்பு..
Sep 20, 2019


தெலுங்கானாவில் அரசு சார்ந்த நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் அனைவருக்கும் தலா 1 லட்ச ரூபாய் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கனாவில் உள்ள அரசு நிறுவனமான எஸ்.சி.சி.எல் என்ற நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 48 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எஸ்.சி.சி.எல்.நிறுவனத்தில் தெலுங்கானா மற்றும் மத்திய அரசுக்கு 51:49 என்ற அடிப்படையில் பங்கு உள்ளது.

இந்த நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு வருவாய் 1765 கோடி ரூபாயாகும். இந்நிலையில் 5 ஆண்டுகளாக பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாயை தசரா போனஸாக அளிப்பதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

இதே போல் 2017-18 ம் ஆண்டில், நிறுவனத்தின் 27% இலாபம் தொழிலாளர்களுடன் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு தொழிலாளிக்கும் 60,369 ரூபாய் போனஸாக வழங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் 40530 ரூபாய் அதிகமான போனஸ் தொகையை தெலுங்கானா மாநில அரசு கொடுத்துள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019