அல்பேனியா நாட்டில் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி 22/09/2019

அல்பேனியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி...
Sep 22, 2019


அல்பேனியா நாட்டில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

தலைநகர் டிரனா (Tirana) மற்றும் கடற்கரை நகரமான டுர்ரஸ் (Durres) ஆகிய இடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியே பலமாக குலுங்கியது. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.

கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், 2 கார்கள் உருக்குலைந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 49 பேர் லேசான காயமடைந்தனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அல்பேனியா நாட்டின் வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் நேரிட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019