கிரீன்லாந்து நாட்டில் மீண்டும் பனிப்பாறைகள் உருகி வருகிறது 24/09/2019

கிரீன்லாந்தில் மீண்டும் உருகி விழும் பனிப்பாறைகள்...
Sep 24, 2019


கிரீன்லாந்து நாட்டில் மீண்டும் பனிப்பாறைகள் உருகி வருவது சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.

அந்நாட்டின் தெற்குப் பகுதியில் நிக்கோலா பாயேஸ் என்பவரின் தலைமையில் ஒரு குழுவினர் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற படகினருகே கடலில் மிதந்து வந்த பிரமாண்டமான பனிபாறை சில நொடிப் பொழுதில் கரைந்து விழுந்தது.



தொடர்ந்து அவர்கள் படம் பிடித்துக் கொண்டிருந்த போது எஞ்சிய பனிப்பாறையும் இரண்டு துண்டாக உடைந்தது.

இதனால் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர முடியாமல் திரும்பினர். இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரே நாளில் 11 பில்லியன் டன் அளவிற்கு பனிப்பாறைகள் உருகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019