இன்று இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு 25/09/2019
இடைத் தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு...
Sep 25, 2019
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்றார். இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அவர் கூறினார்.
Comments
Post a Comment