அவுட்கோயிங் கால்களுக்கான அழைப்பு நேர அளவு அதிகரிப்பு..! 27/09/2019
ஜியோ அவுட்கோயிங் கால்களுக்கான அழைப்பு நேர அளவு அதிகரிப்பு...
Sep 27, 2019
ஜியோ நிறுவனம் அவுட்கோயிங் கால்களுக்கான அழைப்பு நேர அளவை 20 விநாடிகளிலிருந்து 25 விநாடிகளாக அதிகரித்துள்ளது.
ஜியோ நிறுவனம் இண்டெர்கனெக்ஷன் பயன்பாடு கட்டணங்களை குறைப்பதற்காக அவுட்கோயிங் அழைப்புகளுக்கான கால அளவை குறைத்து வைத்திருப்பதாக ஏர்டெல் நிறுவனம் டிராய் அமைப்புக்கு கடிதம் எழுதியிருந்தது.
மேலும் இதன் மூலம் ஜியோ பயனாளர்களிடமிருந்து வரும் மிஸ்டு கால்களின் எண்ணிக்கை அதிகரித்து, அந்த எண்ணுக்கு திரும்ப அழைப்பது அதிகரிக்கும் எனவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஜியோ நிறுவனம் கால அளவை அதிகரிக்காவிட்டால் தங்கள் நிறுவனமும் அவுட்கோயிங் அழைப்புகளின் கால அளவை 20 விநாடிகளாக குறைக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்திருந்தது.
செப்டம்பர் 6ம் தேதி டிராய் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் உள்ளிட்ட நிறுவனங்கள், 30 விநாடி என்ற கால அளவில் உறுதியாக இருந்தன.
அந்தக் கூட்டத்தில் ஒருவர் அழைப்பை எடுத்து பேசுவதற்கு 15 முதல் 20 விநாடிகளே போதுமானது எனவும், இது வெளிநாடுகளில் உள்ள வழக்கமான அளவு தான் எனவும் ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
இருப்பினும் தங்கள் நிறுவனத்தின அவுட்கோயிங் அழைப்புகளின் கால அளவினை 25 விநாடியாக அதிகரிக்க ஜியோ நிறுவனம் ஒத்துக் கொண்டது.
அதனை செயல்படுத்தும் விதமாக ஜியோ நிறுவனம் தற்போது அவுட்கோயிங் அழைப்புகளின் கால அளவை 25 விநாடிகளாக உயர்த்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் புகார் மீது டிராய் இதுவரை முடிவு எதையும் அறிவிக்காத நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sup
ReplyDelete