காந்தி மேற்கொண்ட பயண காட்சிகள்... 28/09/2019
தமிழகத்தில் காந்தி மேற்கொண்ட பயண காட்சிகள்..!
Sep 28, 2019
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழக மக்கள் அவரது அஸ்திக்கு செலுத்திய இறுதி அஞ்சலி உள்பட ஆவணப்படம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் இயங்கிவரும் தேசிய திரைப்பட கருவூலத்தின் இயக்குநர் பிரகாஷ் மகடும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் அரிய நிகழ்வுகள் மற்றும் அவரது மறைவின் போது தமிழக மக்கள் அவரது அஸ்திக்கு செலுத்திய இறுதி அஞ்சலி உள்பட 30 ரீல்கள் அளவிலான ஆவணப்படம் கிடைத்துள்ளது என்றார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வேளையில் இந்த படங்கள் நமக்கு கிடைத்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும் என்று அவர் கூறினார். வெளிநாடுகளைச் சேர்ந்த படத்தயாரிப்பு நிறுவனங்களான பாரமவுண்ட், பாத்தே, வார்னர், யூனிவர்சல், பிரிட்டிஷ் மூவிடோன் உள்ளிட்ட ஸ்டுடியோ ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பல்வேறு தனிநபர்களிடம் இருந்து இந்த அரிய ஆவணப்பட தொகுப்பு பெறப்பட்டுள்ளதாகவும் பிரகாஷ் மகடும் கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி மற்றும் கும்பகோணம் கோவில்களுக்கு காந்தி செல்லும் காட்சிகளும் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மகாத்மா காந்தியின் அஸ்தி சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரெயில் மூலம் கொண்டு செல்லப்பட்டபோது பல ஊர்களில் கண்ணீர் மல்க மக்கள் அஸ்தி கலசத்தை வணங்கி வழிபாடு செய்த 30 நிமிட காட்சி இந்த தொகுப்பில் அடங்கியுள்ளது.

Comments
Post a Comment