பலேனோ ஆர். எஸ். காரின் விலையில் ரூ.ஒரு லட்சம் குறைப்பு.... 28/09/2019


பலேனோ ஆர்.எஸ். காரின் விலையில் ரூ.1 லட்சம் குறைப்பு.!
Sep 28, 2019


பலேனோ ஆர்.எஸ். காரின் ஷோரூமுக்கு முந்தைய விலையில், ஒரு லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் வரிக்குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளித்து, கார் விற்பனையை மீண்டும் அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் மாருதி சுசுகி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

முதற்கட்டமாக, குறிப்பிட்ட மாடல் கார்களின் ஷோரூமுக்கு முந்தைய விலையில், 5 ஆயிரம் ரூபாயை அந்நிறுவனம் குறைத்து அறிவித்தது. ஆல்டோ 800, கே. 10, ஸ்விப்ட் டீசல், செலிரியோ உள்ளிட்ட கார்களுக்கு இந்த விலைக்குறைப்பு பொருந்தும் என்றும் மாருதி சுசுகி கூறி இருந்தது.

தற்போது இரண்டாம் கட்ட நடவடிக்கையாக பலேனோ ஆர்.எஸ். மாடல் காரின் விலையில் ஒரு லட்சம் ரூபாயை அந்நிறுவனம் குறைத்துள்ளது. ஷோரூமுக்கு முந்தைய விலையில், ஒரு லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தற்போது அந்தக் காரின் ஷோரூமுக்கு முந்தைய விலை 7 லட்சத்து 88 ஆயிரமாகக் குறைந்துள்ளது. 998 சி.சி. பெட்ரோல் எஞ்சின் கொண்ட பலேனோ ஆர்.எஸ்., 75 கிலோ வாட் ஆற்றலும், 150 நியூட்டன் மீட்டர் டார்க் (Torque) திறனும் கொண்டதாகும்.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019