உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ் நிறுவனம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது 25/09/2019


போர்ப்ஸின் 2019ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியல்...
Sep 25, 2019


போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2019ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ் நிறுவனம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது.

போர்ப்ஸ் பத்திரிகை உலகளவிலான சிறந்த நிறுவனங்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆய்வை ஸ்டாடிஸ்டா என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தியது.

50 நாடுகளில் சுமார் 2000 நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்திய அக்குழுவினர், நிறுவனங்களின் நம்பகத்தன்மை, சமூக நடத்தை, தயாரிப்புகள், சேவைகள் மற்றும் செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு முதல் 250 நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இப்பட்டியலில், நிதி சேவை நிறுவனமான விசா (visa) முதலிடத்தையும், இத்தாலியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான பெராரி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான இன்போசிஸ் இப்பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 31ஆவது இடத்தில் இருந்த இன்போசிஸ் இந்த ஆண்டு 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நடப்பாண்டுக்கான சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் மொத்தம் 17 இந்திய நிறுவனங்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019