டெல்லி, லக்னோ இடையிலான தேஜாஸ் ரயில் அக்டோபர் 5ம் தேதி முதல் இயக்கப்படும் 24/09/2019
தனியார் ஒத்துழைப்புடன் இயக்கப்படும் தேஜாஸ் ரயில்...
Sep 24, 2019
தனியார் ஒத்துழைப்புடன் இயக்கப்படும் டெல்லி, லக்னோ இடையிலான தேஜாஸ் ரயில் அக்டோபர் 5ம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி, லக்னோ தேஜாஸ் ரயில் செவ்வாய் கிழமை தவிர ஏனைய 6 நாட்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து மதியம் 3.35க்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு லக்னோ சென்றடையும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 6ம் தேதி காலை 6 மணிக்கு லக்னோவில் இருந்து புறப்பட்டு மதியம் 12.25க்கு டெல்லி வந்தடையும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ஆனது ஒரு ஏசி எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் மற்றும் ஒன்பது ஏசி சேர் கார் பெட்டிகளை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment