இயங்கும் 6 அடி உயர ரோபோ..! 24/09/2019

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 6 அடி உயர ரோபோ...!
Sep 23, 2019


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்கும் ஆறடி ரோபோவை தனியார் கல்லூரி மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.



சென்னை தியாகராய நகரில் உள்ள ஷாசன் ஜெயின் மகளிர் கல்லூரியில் பிசிஏ இறுதியாண்டில் பயிலும் மாணவிகள் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

ஆறு அடி உயரம், 29 கிலோ எடையும் கொண்ட அந்த ரோபோவுக்கு சாரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. நகர்ந்து செல்லும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, வரவேற்பாளர் போல் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிதாக கல்லூரிக்கு வரும் விருந்தினர்களை வரவேற்று, கல்லூரி குறித்த விவரங்களை அளிக்கும் வகையிலும், சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் ரோபோவில், உள்ளீடுகள் செய்யப்பட்டுள்ளன.



தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ரோபோவை, வரும் காலங்களில், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பேசக்கூடிய வகையில் வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019