7000 பேனர்கள் அகற்றம்.... 17/09/2019

அனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றம்...
Sep 17, 2019


சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 7 ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 30ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த பணிகளில் அரசியல் கட்சிகளை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவினரையும் பங்கேற்க செய்து பணிகளை மேற்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வரப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, சாலையில் குழி தோண்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

பருவமழை காலத்தில் சாலைகளில் குழி தோண்டுவதை தவிர்க்கும் வகையில் அனைத்து மண்டலங்களிலும் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். வரும் நவம்பர் 15ம் தேதி முதல் குறிப்பிட்ட காலத்துக்கு சாலைகளில் குழி தோண்டுவது தவிர்க்கப்படும் என்றும் அதை ஒருங்கிணைப்பு குழு கண்காணிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019