737 மேக்ஸ் விமான விபத்துகளில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு.. 24/09/2019

போயிங் 737 மேக்ஸ் விமான விபத்துகளில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு..
Sep 24, 2019


737 மேக்ஸ் விமான விபத்துகளில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் போயிங் நிறுவனத் தயாரிப்பான 737 மேக்ஸ் ரக விமானங்கள், எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளாகின.

இந்தோனேசியாவில் நடந்த விபத்தில் 189 பேரும், எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர். இதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் நிறுத்தப்பட்டன.

இதற்கிடையே, போயிங் நிறுவனத்திற்கு எதிராக சுமார் 100 வழக்குகள் தொடுக்கப்பட்டன. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இரு விபத்துகளில் உயிரிழந்த அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த 346 பேரின் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கென சுமார் 350 கோடி ரூபாயை போயிங் நிறுவனம் கடந்த ஜூலையில் ஒதுக்கியது.

அந்த தொகையில் இருந்து 346 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடியே 2 லட்சத்து 28 ஆயிரத்து 413 ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமென போயிங் அறிவித்துள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நிதி வழங்கல் பணியை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இழப்பீட்டுத் தொகையைப் பெற எந்த நிபந்தனையும் இல்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019