கிராம பகுதிகளில் புதிய திட்டம்... 01/11/2019
உலக வங்கி நிதியுதவியுடன் கிராம பகுதிகளில் புதிய திட்டம்...
Nov 01, 2019
கிராமப் பகுதிகளில் உலக வங்கியின் நிதி உதவியுடன்‚ 'தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்‛ செயல்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிகேணியிலுள்ள கலைவாணர் அரங்கத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 550.50 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் திறப்பு விழாவும், 112.62 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
இதேபோல் பல்வேறு துறைகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்குதல், மகளிர் சுயஉதவி குழுவினருக்கு வங்கி கடனுதவி வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல் விழாவும் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, செயல்படுத்தப்பட்ட திட்டங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், உதவித் தொகை மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கியும் பேசினார்.
அப்போது அவர், கிராமபுறங்களில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது, 2 கட்டங்களாக 6 வருடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார். இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு 172 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார்.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2019-2020 நிதியாண்டில் 12,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 5 ஆயிரத்து 247 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment