12 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை... 23/10/2019

முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை..! 12 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை...
Oct 23, 2019


மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்ட உள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், காவிரி கரையோரம் வசிக்கும் 12 மாவட்ட மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 119.330 அடியை எட்டியது. முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை எட்ட இருப்பதால், இன்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளது.



இதனால், காவிரிக் கரையில் அமைந்துள்ள சேலம், நாமக்கல்,ஈரோடு, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி,புதுக்கோட்டை,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களிலும் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு மேட்டூர் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 500 கன அடியும், கால்வாய் பாசனத்திற்காக 350 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019