தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறியுள்ளது... 24/10/2019

தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேற்றம்...
Oct 25, 2019


ஜிஎஸ்டி நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நாடுகளின் 2020-ஆம் ஆண்டுக்கான பட்டியலை உலக வங்கி நேற்று வெளியிட்டது. இதில், 14 இடங்கள் முன்னேற்றம் கண்டு 63-ஆவது இடத்தை இந்தியா பிடித்தது.

இது தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திவால் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதே இந்தப் பட்டியலில் இந்தியா முன்னேற்றமடைந்துள்ளதற்கு முக்கியக் காரணம் என்றார்.

சரக்கு-சேவை வரி நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளதாகவும், இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் தரவரிசையை மேலும் மேம்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்க மாநில அரசுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019