நீண்ட நேரம் பயணிக்கும் விமான சேவை..! 18/10/2019

உலகிலேயே நீண்ட நேரம் பயணிக்கும் விமான சேவை தொடக்கம்...
Oct 18, 2019


உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

குவாண்டாஸ் போயிங்787 ரக விமானம் ஐம்பது பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக பயணிக்க உள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு புறப்படும் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் பயணித்து ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்துறையில் புதிய வரலாற்றை படைக்கும் இந்த முயற்சியில் பயணிகளுக்கு தேவையான உணவு, உறக்கம், மருத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளாதாக குவாண்டாஸ் போயிங் 787 நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பயணிகளின் அனுபவத்தை தொடர்ந்து குவாண்டாஸ் போயிங் 787 விமானங்களின் சேவை 2022ம் ஆண்டுமுதல் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019