இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி... 18/10/2019


தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி...
Oct 18, 2019


தீபாவளியன்று காலை ஒரு மணி நேரமும் இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க புதுச்சேரியில் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை புதுச்சேரி சுற்றுசூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்டுள்ளது. அதில் தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்லாது மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள், நீதிமன்ற வளாகம் மற்றும் கல்விக் கூடங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவுவரை பட்டாசு வெடிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முடிந்த அளவிற்கு அதிக புகையை வெளியேற்றும் பட்டாசுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019