சிறந்த விமான இருக்கைக்காக சிங்கப்பூர் விமானம் தேர்வு... 20/10/2019

சிறந்த விமான இருக்கைக்காக சிங்கப்பூர் விமானம் தேர்வு...
Oct 20, 2019


உலகில் மிகச் சிறந்த விமான இருக்கையாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் இருக்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஹீத்ரு விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர்பஸ் ஏ380 விமானத்தின் இருக்கைகள் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு பயணிக்கும் 50 சதுர அடி உள்ள தனி அறையாக இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரட்டை படுக்கைகள் கொண்ட பெட் வசதி, தனியான குளியலறையுடன் கூடிய கழிவறை, முழுச்சுற்று சுழலும் இருக்கைகள். விருப்பப்படி திருப்பிக் கொள்ளக் கூடிய டிவிக்கள் என அனைத்து சிறப்பம்சங்களும் இந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது 6 அறைகள் மட்டுமே கொண்ட இந்த விமானத்தில் லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிக்க நபர் ஒருவருக்கு இந்திய மதிப்பில் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019