மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது... 22/10/2019
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை கேபினட் கூடுகிறது...
Oct 22, 2019
மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ இல்லம் அமைந்துள்ள, டெல்லி 7 லோக் கல்யாண் மார்கில் (7 Lok Kalyan Marg) நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட கேபினட் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள் குறித்து, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment