நாளை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை... 23/10/2019
மகாராஷ்டிரம், ஹரியானாவில் நாளை வாக்கு எண்ணிக்கை...
Oct 23, 2019
மகாராஷ்டிரம் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும், ஹரியாணா சட்டப்பேரவையிலுள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை எண்ணப்படவுள்ளன. இதையொட்டி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டுள்ளன. இருமாநிலங்களிலும் வாக்கு எண்ணும் பணி, காலை 8 மணியளவில் தொடங்குகிறது.
முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இதனால் படிப்படியாக முன்னணி நிலவரங்கள் வெளியாகும்.
பிற்பகலுக்குள் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது தெரிந்துவிடும். தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகள், இரண்டு மாநிலங்களிலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக தெரிவித்தன.
Comments
Post a Comment