பயன்படாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... 29/10/2019


பயன்படாத நிலைக்கு மாறிய ஆழ்துளைக் கிணறுகள் - முக்கிய உத்தரவு...
Oct 29, 2019


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போடப்பட்டு பயன்படாத நிலைக்கு மாறிய ஆழ்துளை கிணறுகள், நீர் உறிஞ்சு கிணறுகள் உள்ளிட்டவற்றை 24 மணி நேரத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற வாரியப் பொறியாளர்களுக்கு மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளிக் கிணறு ஆகியவை செயல்படாமல் இருந்தால் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதோடு, ஆடு மாடு ஆகியவை விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே அதனை உடனடியாக மூட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இயங்காத மற்றும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளாக மாற்றுவதற்கு எந்த வகையான தொழில்நுட்ப உதவியையும் தமிழ்நாடு குடிநீர் வடிவால் வாரியம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் மகேஸ்வரன் கூறியுள்ளார்.


Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019