நடைபெற்ற இடைத்தேர்தலில் பல இடங்களில் பாஜக வாகை சூடியிருக்கிறது... 24/10/2019

பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை...
Oct 24, 2019


நாட்டின் பல்வேறு மாநிலங்களில், 50க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், உத்தரப்பிரதேசம் உட்பட பல இடங்களில், பாஜக வாகை சூடியிருக்கிறது.

உத்திரப்பிரதேசத்தில், 11 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 7 இடங்களில் வெற்றிபெற்றது. குஜராத் மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகியவை தலா 3 தொகுதிகளில் வாகை சூடியுள்ளன.

கேரளாவில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவை தலா 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்றன.முஸ்லீம் லீக் ஒரு தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.

பீகாரில் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம், ஏ.ஐ.ஐ.எம், சுயேட்சை ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

பஞ்சாபில், 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் காங்கிரஸ் 3 தொகுதியிலும், ஷிரோன்மணி அகாலி தளம் ஒரு தொகுதியிலும் வாகை சூடின. அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், பாஜக 3 தொகுதியிலும், ஏஐயுடிஎஃப்((AIUDF)) ஒரு தொகுதியிலும் வெற்றிப்பெற்றன. 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019