வருமான வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது... 25/10/2019
வருமான வரிச் சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு திட்டம்...
Oct 25, 2019
வருமான வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 5 சதவீத வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. 5 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கான அதிகபட்ச வரி வரம்பு 42.74 சதவீதமாக உள்ளது.
தனிநபர் வருமான வரியில் சில சலுகைகளை அறிவிப்பதன் மூலம் நுகர்வை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆண்டுக்கு பத்துலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உடைய பிரிவினருக்கு சலுகைகளை அளிப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது இப்பிரிவினர் 30 சதவீதம் வரி செலுத்தி வருகின்றனர்.
வீட்டு வாடகை வரம்பை உயர்த்துவது, வங்கி டெபாசிட்டுக்கான வரிவிதிப்பை தவிர்ப்பது போன்ற சலுகைகளை வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

😂
ReplyDelete