ஆழ்துளை கிணறுகளை மூடுக..! 26/10/2019

ஆழ்துளை கிணறுகளை மூடுக..! மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு..!
Oct 26, 2019


மணப்பாறை அருகே 2 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்டம் தோறும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத, பராமரிப்பு இல்லாத, முறையாக மூடப்படாத கிணறுகளை ஆய்வு செய்து உடனடியாக மூடவும் அதன் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரமே இந்த உத்தரவு பிறக்கப்பட்டு பெரும்பாலான ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுவிட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் தனியார் சார்பிலோ அரசு சார்பிலோ போடப்பட்டு, பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை கணக்கெடுத்து, அவற்றை மூடி சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

ஈச்சங்காடு கிராமத்தில் உப்பனாறு ஓரம் உள்ள பகுதிகளில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மூன்று நாட்களுக்குள் இந்தப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என ஊராட்சி செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019