அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ... 29/10/2019


கலிபோர்னியா நகரங்களில் பற்றி எரியும் தீயால் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்...
Oct 29, 2019


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், வனப்பகுதிகள் தீப்பற்றி குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவி வருவதால், லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் பலத்த சூரைக்காற்றுடன் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் சொனாமா, விண்ட்சர், சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 74,000 ஏக்கர் நிலங்கள் தீயில் கருகியுள்ளன.

மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் தீப்பற்றி எரிவதால், சுமார் 123 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீயில் சேதமடைந்துள்ளன. இதனால் லாஸ் ஏஞ்செல்ஸ் உள்ளிட்ட நகரங்கள் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.

இந்தநிலையில் கடற்கரையோரம் உள்ள பகுதிகளிலிருந்து சினிமா பிரபலங்கள் உள்பட லட்சக்கணக்கான மக்களை அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு கருதி 9,70,000 வீடுகளின் மின் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக சுமார் 6 லட்சம் வீடுகளின் மின்இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019