கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து... 30/10/2019

சென்னை சில்கஸ் துணிக்கடையில் தீ விபத்து...
Oct 30, 2019


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவில்பட்டி பிரதான சாலையில் சென்னை சில்க்ஸ் துணிக்கடை உள்ளது. 3 மாடிகள் கொண்ட இந்த ஜவுளிக்கடையில் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி, விளாத்திகுளம், கழுகுமலை ஆகிய பகுதிகளிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தீவிபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019