4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்... 24/10/2019

நாளை முதல் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்...
Oct 24, 2019


4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, பணியிடக் கலந்தாய்வு, உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நாளை முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அவசர அறுவை சிகிச்சை மற்றும் டெங்கு காய்ச்சல் சிகிச்சை தவிர வேறு எந்த மருத்துவ பணியிலும் அரசு மருத்துவர்கள் ஈடுபட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநோயாளிகள் பிரிவிலும் சிகிச்சை அளிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019