அதிகாலை 5.30 மணிக்குப் பிறகு சிறுவனின் சத்தம் கேட்கவில்லை... 26/10/2019


அதிகாலை 5.30 மணிக்குப் பிறகு சிறுவனின் சத்தம் கேட்கவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை...
Oct 26, 2019


சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

குழந்தையை மீட்க இந்த நிமிடம் வரை போராடிக் கொண்டிருக்கிறோம்

உயர்நிலை வல்லுநர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்

முதலில் சிறுவனின் அழுகுரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது

சிசிடிவி காமிரா மூலம் கண்காணித்துக் கொண்டே கயிறை இறக்கினோம்

ஒரு நிமிடம் கூட தங்குதடையின்றி குழுவினர் அனைவரும் போராட்டம்

கயிறு கட்டி மேலே இழுக்கும் முயற்சி 3 முறை நழுவிவிட்டது

கையில் கட்டியிருந்த கயிறு உருவி, சிறுவன் நழுவி 70 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டான்

70 அடி ஆழத்திற்கு சிறுவன் சென்றாலும் சிறுவன் மூச்சுவிடும் ஓசை தொடர்ந்து கேட்டது

ஐஐடியினர் வழங்கிய கருவி மூலம் மீட்பு முயற்சி நடைபெற்றது

ஆக்சிஜன் தொடர்ந்து அதிகபட்சமாக செலுத்திக் கொண்டேயிருக்கிறோம்

முதலமைச்சர் உள்ளிட்டோர் நிலவரத்தை கேட்டறிந்தார்கள்

அதிகாலையில் சிறிதளவு மண் விழுந்து மூடியதால் பின்னடைவு ஏற்பட்டது

மீட்புப் பணி சவாலாக உள்ளது

70 அடி ஆழத்தில் சிறிய இடைவெளி கூட இல்லாமல் பையன் இறுகியுள்ளான்

சிறுவனைச் சுற்றி சிறிதுகூட இடைவெளி இல்லாமல் இருப்பதால் மீட்புப் பணி சவாலாக உள்ளது

இந்த நிமிடம் வரை நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கிறோம்

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வந்து கொண்டிருக்கின்றனர்

ஒட்டுமொத்த மருத்துவமனையே இங்கு தயாராக உள்ளது

சிறுவன் மூர்ச்சையாகி மயக்க நிலையில் வந்தாலும் விரைந்து செயலாற்ற மருத்துவக் குழு தயாராக உள்ளது

மண் விழுந்தது, ஈரப்பதம் ஆகியவை மிகப்பெரிய சவாலாக உள்ளன

நல்ல சத்தம் கொடுத்துக் கொண்டிருந்த பையனிடமிருந்து, அதிகாலை 5.30 மணிக்குப் பிறகு சத்தம் வரவில்லை... 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019