சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்து கண்டெடுப்பு..! 21/10/2019

8000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்து கண்டெடுப்பு..
Oct 21, 2019


சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்காலத்தை சேர்ந்த முத்து அபுதாபியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி அருகே உள்ள தீவுப்பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் கற்காலத்தை சேர்ந்த கற்சிற்பங்கள், பீங்கான் பொருட்கள், ஓடு மற்றும் கற்களால் செய்யப்பட்ட மணிகள் கண்டெடுக்கப்பட்டன. அதனுடன் பழையமான முத்து ஒன்றும் கிடைத்துள்ளது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அந்த முத்து கற்காலத்தின் கடைசி பகுதியை சேர்ந்தது என்பதும் தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து ’அபுதாபி முத்து’ என்று பெயரிடப்பட்ட இந்த முத்து அங்குள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இம்மாதம் 30ம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019