LED டிவி திருட்டு பதிவான சிசிடிவி காட்சிகள்... 22/10/2019

ரூ.50 லட்சம் மதிப்பு எல்இடி டிவிக்களை திருடிய சிசிடிவி காட்சிகள்...
Oct 22, 2019


பீகாரில், குடோன் காவலாளி மற்றும் லோடு வேன் டிரைவரை பிணை கைதியாக வைத்து, கொள்ளையர்கள் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான எல்இடி டிவிக்களை கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பாட்னாவில் குயிக் சொலியூஷன் என்ற எலக்ட்ரானிக் நிறுவனம் பண்டிகை தின விற்பனைக்கென புதிதாக டிவிக்களை கொள்முதல் செய்திருந்தது. இந்த லோடுகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று கடந்த ஞாயிற்று கிழமை நிறுவன குடோனுக்கு வந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து 4 பேர் வந்துள்ளனர்.

பின்னர் காவலாளியிடம் தண்ணீர் கேட்பது போல் பேச்சுக்கொடுத்து குடோனுக்குள் சென்று கும்பல், காவலாளி மற்றும் வேன் டிரைவரை துப்பாக்கி காட்டி மிரட்டி மடக்கியுள்ளனர். அதன்பின் அவர்களது செல்போன்களை பறித்த கும்பல், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 எல்இடி டிவிக்கள், வெள்ளி மற்றும் தங்க நாணயங்களை கொள்ளையடித்து சென்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019