NH 844 விரிவாக்க பணியை மாற்று வடிவில் செயல்படுத்த உத்தரவு... 19/10/2019
நெரலூரு முதல் அதியமான்கோட்டை வரை NH 844 விரிவாக்க பணியை மாற்று வடிவில் செயல்படுத்த உத்தரவு...
Oct 19, 2019
கர்நாடகம்- தமிழகம் இடையே மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை விரிவாக்க பணியை தற்போதைய வடிவில் செயல்படுத்தாமல், திருத்தம் செய்து மாற்று வடிவில் செயல்படுத்துமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 844இல் பெங்களூருவில் உள்ள நெரலூரு முதல் தர்மபுரி அருகே அதியமான்கோட்டை வரை சாலையை விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக சுற்றுச்சூழல் பாதிப்பு கணக்கீட்டு ஆணையம், பெங்களூருவில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக பிராந்திய அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோரை கொண்ட குழுவிடம் அறிக்கை கோரியது.
சம்பவ இடத்தை பார்வையிட்டு அக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், தற்போதைய வடிவில் நெடுஞ்சாலை விரிவாக்க பணியை செயல்படுத்துவதற்கு எதிராக பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருந்தன.
இதை பரிசீலித்த தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் உள்ளிட்டோரை கொண்ட அமர்வு, ஓசூர் பகுதியில் இருக்கும் ஏரிகளுக்கும், யானைகள் வாழ்விடத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் நெடுஞ்சாலை விரிவாக்க பணியை தற்போதைய வடிவில் செயல்படுத்தாமல் திருத்தம் செய்து மாற்று வடிவில் செயல்படுத்தும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதை தமிழக சுற்றுச்சூழல் பாதிப்பு கணக்கீட்டு ஆணையம் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

Comments
Post a Comment