TCS ஊழியர்கள் சம்பளத்தில் மாற்றம்... 19/10/2019


TCS ஊழியர்கள் சம்பளத்தில் மாற்றம்...
Oct 19, 2019


லாபத்தை அதிகரித்து, சம்பள செலவினத்தை குறைக்கும் நோக்கில் டாடா கன்சல்டன்சி நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் மாற்றம் செய்து வருகிறது.

அதன்படி டிஜிட்டல் தொழில்நுட்ப திறன் கொண்ட இளம்பொறியாளர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தவும், ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்று பணியில் சிறப்பாக செயல்படும் அனுபவமிக்க ஊழியர்களின் ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்கவும் முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாது ஒப்பந்த செலவினங்களை குறைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்காலிக ஊழியர்களுக்கு பதில் முழு நேர பணியாளர்களை அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

அதனுடன் நடப்பாண்டு கூடுதலாக 26,453 ஊழியர்களை பணி நியமனம் செய்தது போல், அடுத்தாண்டும் முதல் 6 மாதங்களில் அதே எண்ணிக்கையில் புதிதாக ஊழியர்களை நியமனம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் வேலை இல்லா நிலை உருவாகாது எனவும், நிறுவனமும் புத்துணர்ச்சி பெற்று புதுப்பொலிவுடன் இருக்கும் எனவும் டிசிஎஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019