ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டதில் அரசியல் இல்லை... 03/11/2019

ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டதில் அரசியல் இல்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
Nov 03, 2019


நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசால் விருது வழங்கப்பட்டதற்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ரஜினியின் நடிப்புக்கும், அவரது பணிக்கும் விருது வழங்கப்பட்டிருக்கிறது என்றும், அந்த விருதை மத்திய அரசு முன்கூட்டியே கொடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

டிடிவி தினகரனின் அமமுக என்பது கட்சியல்ல அது ஒரு குரூப் எனத் தெரிவித்த அமைச்சர், அக்கட்சியிலிருப்போர் அதிமுகவை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். தினகரன் கூடாரம் காலியாக உள்ளதாகவும், தேர்தலில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையேதான் போட்டி என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019