இந்தியாவுக்கு பெரும் ஆபத்து என எச்சரிக்கை...! 05/11/2019

கடல் நீர்மட்டம் உயர்வதால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து என எச்சரிக்கை...
Nov 05, 2019


கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்திய பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐநா சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்ரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உலகில் காலநிலை மாற்றம் என்பது மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டார்.

முன்பை விட கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட குட்ரெஸ், இதன் காரணமாக வரும் 2050ம் ஆண்டிற்குள் 300 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அச்சம் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் மற்றும் கடல் நீர்மட்டம் அதிகரிப்பு தொடர்ந்தால் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளான ஜப்பான், சீனா, வங்கதேசம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் பெரும் ஆபத்தைச் சந்திக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். எனவே உலக நாடுகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019