வெங்காயத்தை பதுக்கிவைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்... 06/11/2019

வெங்காயத்தை பதுக்கிவைத்தால் நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜு...
Nov 06, 2019


வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெங்காயம் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் தலைமையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, மழை காலங்களான நவம்பர்-டிசம்பர் மாதங்களில் வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளதாக விளக்கமளித்தார். வெங்காயத்தை பதுக்கிவைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019