இன்போசிஸ் ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.... 06/11/2019
சரிவர வேலை செய்யாத இன்போசிஸ் ஊழியர்கள் பலர் பணிநீக்கம்..?
Nov 06, 2019
இந்தியாவின் 2ஆவது மிகப்பெரிய சாப்ட்வேர் சேவை நிறுவனமான இன்போசிஸ் (infosys), பல்வேறு துறைகளிலும் சரியாக வேலை செய்யாத ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளில், இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி தவறானது என்று இன்போசிஸ் வட்டாரங்கள் மறுத்துள்ளன.
இதுகுறித்து ஐ.ஏ.என்.எஸ்.(ians) செய்தி நிறுவனத்துக்கு இன்போசிஸ் தரப்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சரிவர வேலை செய்யாத நபர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாகவே ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sup
ReplyDelete