இன்றைய வர்த்த நேர தொடக்கத்தில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது மும்பை பங்குச்சந்தை..! 07/11/2019
மத்திய அரசின் நிதி அறிவிப்பால் பங்குச்சந்தைகளில் எழுச்சி...
Nov 07, 2019
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்த நேர தொடக்கத்தில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும், நல்ல உயர்வை கண்டிருக்கிறது. காலை வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 200 புள்ளிகள் அதிகரித்து, 40 ஆயிரத்து 676 புள்ளிகள் என்ற புதிய உச்சத்துடன் வர்த்தகம் தொடங்கி நடைபெறுகிறது.
இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 12 ஆயிரம் புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகத்தை எதிர்கொண்டுள்ளது. போதிய நிதி ஆதாரங்கள் இன்றி தடுமாறும் கட்டுமானத்துறையை ஊக்குவிக்கும் வகையில், ரியல் எஸ்டேட் துறைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத்தொகையை, மத்திய அரசு அறிவித்திருப்பதால், இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சங்களை தொட்டுள்ளதாக, பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்
Comments
Post a Comment