பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை... 08/11/2019
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை...
Nov 08, 2019
பண்மை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும் என்று அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, இரா. காமராஜ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெளிச்சந்தையில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ச்சியாக, பண்மை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, உணவுத் துறை அமைச்சர் இரா. காமராஜ் ஆகியோர் அறிவித்துள்ளனர். வெளிச்சந்தையை விட குறைவாக, ஒரு கிலோ வெங்காயம் 30 ரூபாய் மற்றும் 40 ரூபாய்க்கு விற்கப்படும் என அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Comments
Post a Comment