ஏர் இந்தியா மீது விருப்பமில்லை, இண்டிகோ மீதே விருப்பம்... 08/11/2019
ஏர் இந்தியா மீது விருப்பமில்லை, இண்டிகோ மீதே விருப்பம்: கத்தார் ஏர்வேஸ்...
Nov 07, 2019
ஏர் இந்தியா ((Air India )) நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் விருப்பமில்லை என கத்தார் ஏர்வேஸ் ((Qatar Airways)) தெரிவித்திருக்கிறது.
இண்டிகோ ((IndiGo)) நிறுவனத்தின் பங்குகளை வாங்கவே விருப்பம் உள்ளதாகவும், அதற்கு உகந்த தருணம் இதுவல்ல என்றும் கூறியிருக்கிறது. டெல்லி வந்திருந்த கத்தார் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரி அக்பர் அல் பாக்கர் ((Akbar Al Baker)), இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.
பணபலம் படைத்த முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்தால், ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க, மிகுந்த ஆர்வத்துடன் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஒருவேளை டாடா நிறுவனம் தங்களுடன் இணைந்து வந்திருந்தால், ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க ஆர்வம் இருந்திருக்கும் என்றும், ஆனால், ஏற்கனவே டாடாவிடம் விஸ்தாரா உள்ளதால், அதற்கான சூழல் உருவாகவில்லை, என்றும் கத்தார் ஏர்வேஸ் CEO அக்பர் அல் பாக்கர் ((Akbar Al Baker)) தெரிவித்திருக்கிறார்.

Comments
Post a Comment