பழைமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டலாக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன...! 08/11/2019
ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்...
Nov 08, 2019
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து நிதி பெறப்பட்டு, பழைமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டலாக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் பல்கலைக் கழக ஓலைச்சுவடி துறையில் உள்ள சுவடிகளை ஆய்வாளர்கள் இணையதளத்தில் படிக்கும் வகையில் டிஜிட்டலாக்கி வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லி தேசிய சுவடி இயக்ககமானது தமிழ்நாடு அரசு மின்நூலகத்திட்டம், பிரிட்டிஷ் நூலகம் போன்றவற்றில் இருந்து நிதி பெறப்பட்டு, ஓலைச்சுவடி துறை தலைவர் கோவைமணி மேற்பார்வையில், பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
தமிழ் மொழியில் உள்ள 4 ஆயிரத்து 500 ஓலைச்சுவடி கட்டுகள், சமஸ்கிருதம் ஆயிரம் கட்டுகள், பாலி மொழி 1 கட்டு, தெலுங்கு 50 கட்டுகள், கன்னடம் 7 கட்டுகள் என 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுகள் டிஜிட்டலாக்கப்படுகின்றன.
பழமையான சுவடிகளில் படிந்துள்ள தூசியை சுத்தம் செய்து, அதன்பிறகு ரசாயனத்தைப் பயன்படுத்தி எழுத்துகளை தெளிவு படுத்தி, உலர்த்தி பின்னர் அவை கணினியில் ஏற்றப்படுகின்றன. இந்தப் பணிகளில் முறையாகப் பயிற்சி பெற்ற 5 பேர் ஈடுபட்டுள்ளனர்.

Tamilanda
ReplyDelete