திருப்பதியில் வி.ஐ.பி தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் ரூ. 10,000 செலுத்துவோருக்கு... 05/11/2019
ஆன்லைன் மூலம் ரூ. 10,000 செலுத்துவோருக்கு திருப்பதியில் வி.ஐ.பி தரிசன டிக்கெட்..!
Nov 05, 2019
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமியை அருகில் சென்று தரிசனம் செய்யக்கூடிய விஐபி தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பக்தர்கள் பெறலாம் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி இந்தத் திட்டத்தினை தொடங்கிவைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஸ்ரீவாணி அறக்கட்டளையை தொடங்கியது என்றும் இந்த அறக்கட்டளை தொடங்கியது முதல் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
எனவே ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக அவர்களை வி.ஐ.பி தரிசன வரிசையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தர்மா ரெட்டி தெரிவித்தார்.
தேவஸ்தான இணையதள முகவரியான www.ttdsevaonline.com இணையத்தில் சென்று ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான லிங்க் மூலம் நன்கொடை செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Ultimate
ReplyDelete