11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... 22/11/2019


தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
Nov 22, 2019


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரத்தில் 8 செ.மீட்டரும், கேளம்பாக்கத்தில் 7 செ.மீட்டரும், சோழிங்கநல்லூர், காயல்பட்டினம், கடலூரில் 6 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வருகிற 26-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019