வங்கதேசம் 150இல் ஆல் அவுட்.... 14/11/2019
வங்கதேசம் 150இல் ஆல் அவுட் இந்தியா 86/1...
Nov 14, 2019
இந்தூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களில் சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் இந்தியா, வங்கதேச அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய வங்கதேசம், ஆரம்பமே முதலே இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் விக்கெட்டுகள், சீட்டு கட்டுகள் போல சரிந்தபடி இருந்தன.
இதனால் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களை மட்டுமே வங்கதேச அணியால் எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக முஸ்பிஹிர் ரஹிம் 43 ரன்களும், மொமினுல் ஹேக் 37 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் முகம்மது சமி 3 விக்கெட்டுகளும், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணிக்கு, தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதையடுத்து 2ஆவது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வாலும், புஜாராவும் கைகோர்த்தனர். இருவரின் நிதான ஆட்டத்தால், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா 43 ரன்களுடனும், அகர்வால் 37 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
Comments
Post a Comment