பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 2 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து.... 01/11/2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 2 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து...
Nov 01, 2019


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காதலிப்பதாக கூறி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கூறப்படும் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டர்.

இந்த உத்தரவுக்கு எதிராக இருவரின் தாயார் தொடர்ந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் மகன்களை சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், ஆதலால் அந்த உத்தரவை ரத்து செய்து, 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன்ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்றும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருக்கிறது என்றும் கூறி, குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கும் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019