2 செல்ஃபி கேமராவுடன் விரைவில் வரும் ரியல்மி X50..! 27/11/2019


ரெட்மிக்கு டஃப் கொடுக்கும் ரியல்மி.! 2 செல்ஃபி கேமராவுடன் விரைவில் வரும் Realme X50...
Nov 27, 2019


முன்னணி மொபைல் பிராண்டுகளில் ஒன்றான ரியல்மி நிறுவனம், 5ஜி மொபைல் போன்களை அறிமுகப்படுத்த போவதாக எக்ஸ் 2 ப்ரோவின் அறிமுக நிகழ்வில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தனது முதல் 5ஜி மொபைல் போனின் பெயரையும், அதில் இடம்பெற உள்ள ஸ்பெக்குகள் குறித்தும் சமீபத்தில் சிறிய தகவல் ஒன்றை அளித்துள்ளது.

அதன்படி ரியல்மி நிறுவனம் Realme X50 என்ற 5ஜி போனை, விற்பனைக்கு களமிறக்க போவதாக கூறியுள்ளது. ரியல்மி இந்த ஆண்டின் தொடக்கத்தில் எக்ஸ் 2 ப்ரோ என்ற முதல் ஃபிளாக்ஷிப் போனைஅறிமுகப்படுத்தியது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் மற்றும் ஏராளமான பிற பிரீமியம் விவரக்குறிப்புகளுடன் வந்தது.

தற்போது இந்நிறுவனம் இன்னும் உயர்ந்த இலக்கைக் கொண்டுள்ளது. Realme X50 முதலில் சீனாவில் விற்பனைக்கு வரும். அதன் பின்னர் இந்தியாவில் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனானது விரைவில் வெளியாக உள்ள ரெட்மி கே30 5ஜி போனுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* Realme X50 இரண்டு செல்ஃபி கேமராவுடன் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.

* Dual-mode NSA மற்றும் SA 5G நெட்வொர்க்கிற்கும் ஆதரவை வழங்கும்.

* 5 ஜி உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லாத இடங்களில் மேம்பட்ட இணைப்பிற்காக, துணை -6GHz 5G நெட்வொர்க்குகளின் முழுமையான (SA) மற்றும் முழுமையான (NSA) தரங்களை இது ஆதரிக்கும்.

* இதில் pill shaped hole punch எனப்படும் காகித மூலையில் 2 துளை போட்டது போன்ற வடிவமைப்பு டிஸ்பிளேயின் இடது ஓரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இது இரட்டை செல்ஃபி கேமராவிற்காக என குறிப்பிடப்பட்டுள்ளது.

* Realme X50-யில் எக்ஸ் என்பது எக்ஸ் வரிசையை குறிக்கிறது, இது ரியல்மி செயல்படுத்தும் அனைத்து புதிய தொழில்நுட்பங்களுடனும் முன்னோடித் தொடராகும். 5 என்பது வர உள்ள 5 ஜி தலைமுறை ஸ்மார்ட்போன்களைக் குறிக்கிறது. மற்றும் 0 புதிய தொடக்கங்களுக்கானது என கூறப்பட்டுள்ளது.

* Realme X50 ஸ்னாப்டிராகன் 735 சிப்செட்டால் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இனி வரும் நாட்களில் Realme X50 போனின் மேலும் சில ஸ்பெக்குகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019