மாசு காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்குமா..? 22/11/2019
மாசு காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்குமா.?ஆய்வில் கிடைத்த விடை...
Nov 22, 2019
மாசுபட்ட காற்றை சுவாசிப்பது மனிதர்களின் நுரையீரலையும், இதயத்தையும் பாதிக்கும் என்பது பொதுவான பிரச்சனை. காற்றில் உள்ள சிறிய தூசி துகள்களை நீண்ட காலமாக உள்ளிழுப்பதால் சுவாச பிரச்சினைகள், காற்றுப்பாதைகளின் எரிச்சல், ஆஸ்துமா, சிறுநீரக பிரச்சினைகள் போன்ற சுகாதார பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும்.
சில நேரங்களில் அது புற்றுநோயையும் கூட ஏற்படுத்தும். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, மாசுபட்ட காற்றை சுவாசிப்பது எடை அதிகரிப்பிற்கு கூட வழிவகுக்கும் என்று கூறுகிறது.
உயிரியல் பரிசோதனைக்கான அமெரிக்க சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, காற்று மாசுபாடு நமது எடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து ஆய்வை மேற்கொண்டனர்.
பரிசோதனையின் போது கர்ப்பிணி எலிகள் மற்றும் அவற்றின் சந்ததிகளை ஒரு சில வாரங்களுக்கு தீவிரமாக மாசுபடுத்தப்பட்ட காற்று நிறைந்த பகுதியில் அடைத்து வைத்தனர்.
அதே நேரத்தில் மேலும் சில எலிகளின் குழுவை பிரெஷ்ஷான மற்றும் வடிகட்டப்பட்ட காற்றை சுவாசிக்க வைத்தனர் ஆராய்ச்சியாளர்கள். 19 நாட்களுக்குப் பிறகு, மாசுபட்ட காற்றுள்ள பகுதியில் அடைக்கப்பட்டிருந்த எலிகள் பின்வரும் சிக்கல்களை எதிர்கொண்டது கண்டறியப்பட்டது:
* அவற்றின் நுரையீரல் வீக்கமடைந்து காணப்பட்டது
* அவற்றின் எல்டிஎல் கொழுப்பின் அளவு 50 சதவீதம் அதிகரித்தது
* இன்சுலின் எதிர்ப்பு அளவும் உயர்ந்தது
இது தவிர, தீவிர மாசுபாடு காரணமாக குறிப்பிட்ட எலிகள் எட்டு வாரங்களுக்குப் பிறகு எடை அதிகரித்தன. எலிகளின் இரு குழுக்களுக்கும் ஒரே உணவை அளித்திருந்தாலும், காற்று மாசு சூழலில் அடைக்கப்பட்டிருந்த எலிகளின் எடை அதிகரித்திருந்தது.
வீக்கம் காரணமாக எடை அதிகரிப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த ஆய்வு எலிகள் மீது நடத்தப்பட்டாலும், மனித ஆரோக்கியத்தில் காற்று மாசுபாட்டின் மோசமான விளைவுகளை மறுக்க முடியாது. எனவே மாசுபட்ட காற்றை சுவாசித்தால் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.

Comments
Post a Comment