இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி மாவட்டம்.... 26/11/2019
கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயம்...
Nov 26, 2019
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி மாதம் அறிவித்தார்.
இதற்கான அரசாணையை கடந்த 13-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியராக கிரண்குராலாவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜெயசந்திரனும் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய வட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், மாவட்டத்தின் தொடக்கவிழா கள்ளக்குறிச்சி சாமியார் மடம் மைதானத்தில் காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்குகிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து, திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த விழாவில் முதலமைச்சர் பங்கேற்று கல்லூரி புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, விழுப்புரம் நகராட்சி நூற்றாண்டு விழா திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Sup
ReplyDeleteSup
ReplyDelete